Modele de sadari

இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன்-ஏழை; உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி `சடாரி` வைக்கப்படுகிறது. தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான். அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்தான். என்றுமே மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் ராமபிரானின் உள்ளத்தில் அன்று குழப்பமே மிஞ்சி நின்றது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் அது. தர்மசங்கடத்துக்குக் காரணமாக அமைந்தது, பரதனின் வரவும், கண்ணீர் பெருக அவன் நின்ற நிலையும். இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. இதைக் கேட்ட பகவான் புன்னகைத்தவாறே, `அனைத்தும் நாம் அறிவோம். எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும் `என்று கூறினார். எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், `பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர்.

Comments are closed.